மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Share

(மன்னார் நிருபர்)

(09-09-2021)

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அங்கர் பால்மா வை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை மாலை ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.

-மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>