மன்னார் நிருபர்
(07-05-2026)
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மன்னார் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 7ம் திகதி அ.ன்று, (07)மன்னார் நகர பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, குறிப்பாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் காணி தொடர்பான சட்டங்கள், நடை முறைகள் மற்றும் காணி நிர்வாக செயல்முறைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த செயலமர்வில் கிராம சேவகர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கள், காணி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், லீஸ் (Lease) முறை மற்றும் அனுமதிப்பத்திர அடிப்படையில் காணி வழங்கல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கள் உள்ளிட்ட மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தல் மற்றும் ஏற்பாட்டில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இச் செயலமர்விற்கான நிதி அனுசரணை, யுனப்ஸ் நிறுவனத்தின் விருத்தித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்து.
இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், அரச அதிகாரிகள் காணி தொடர்பான சேவைகளை மக்களுக்கு திறம்படவும் இலகுவாகவும் வழங்குவதற்கான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் மேம்படுத்துவதாகும். அதேவேளை, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காணி சட்டங்கள், புதிய சுற்றறிக்கைகள் (Circulars), அவற்றின் வரைவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல் இந்த செயலமர்வு வழங்கியது.
செயலமர்வின் போது அரச தனியார் காணி என்றால் என்ன?,அரச காணிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?அரச காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவை?அரசு அதிகாரிகள் அரச காணிகளை வைத்திருக்க முடியுமா?காணி உரிமை ஆவணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் நடைமுறைகள்,குத்தகை (Lease) அடிப்படையில் காணி பெறுவதற்கான தகுதிகள், காணி அற்றவர்” என்பவர் யார்?காணி உரிம வகைகள் மற்றும் உரிமை மாற்ற விதிமுறைகள்,அரச காணி வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள்,குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது:
மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. பங்குபற்றுநர்களும் பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறான அறிவூட்டல் செயற்பாடுகள், அரச அதிகாரிகள் தங்களது பணிகளை திறமையாகவும் சட்டப் பூர்வமாகவும் முன்னெடுக்க உதவியாக அமையும் என்பதோடு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செயலமர் விற்கான வளவாளராக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக காணி விழிப்புணர்வு செயலமர்வு துறையில் பணியாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்.