மன்னார் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அரசியல் பிரதி நிதிகள் சமூக மட்ட பிரதி நிதிகள் விசேட கலந்துரையாடல்

Share

மன்னார் நிருபர்

(6-05-2023)

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை(06) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான்,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அரசியல் பிரதி நிதிகளாக
கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>