மன்னார் மாவட்டத்தில் சவர்க்கார உற்பத்தி பயிற்சி பெற்ற 32 பேருக்கு தொடர் உற்பத்தியை மேற்கொள்வதற்கு அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை

Share

(மன்னார் நிருபர்)

(6-06-2023)

மெசிடோ நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தில் சவர்க்கார உற்பத்தி பயிற்சியை பெற்றுக்கொண்டு தெரிவு செய்யப்பட்ட 32 பேருக்கு தொடர் உற்பத்தியை மேற்கொள்வதற்கு அனுமதி யை பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொழில் அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலய அதிகாரி வருகை தந்து பயிற்சியினை வழங்கி வைத்தார்.

குறித்த பயிற்சியின் நிறைவில் அவர்களின் உற்பத்தி திறனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொடர்ச்சியாக சவர்க்கார உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி பத்திரம்(லைசன்ஸ்) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயிற்சியினை பெற்ற 32 பேருக்கும் தேசிய அபிவிருத்தி உற்பத்தி சபையினால் அவர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>