மன்னார் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தடை

Share

-நோய் வாய்ப்பட்ட, மற்றும் இறந்த கால்நடைகள் இறைச்சியாக்கப்படுகின்றமை கண்டுபிடிப்பு.

(மன்னார் நிருபர்)

(3-12-2025)

மன்னார் மாவட்டத்தில் 3ம் திகதி அன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

-குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் 3ம் திகதி அன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>