மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

Share

(14-06-2025)

தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். கணீபா,மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் கில் றோய் பீரிஸ்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்த விஜயரத்தின, உள்ளடங்களாக ராணுவ அதிகாரிகள்,வைத்தியர்கள்,ராணுவவத்தினர்,வைத்தியசாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட தள்ளாடி,கள்ளியடி,மாதோட்டம்,பேசாலை ஆகிய இராணுவ முகாம்களை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ சிப்பாய்கள் இரத்த தானம் செய்து வைத்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>