மன்னார் மாவட்ட விளையாட்டு துறை அபிவிருத்தி தொடர்பாக அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(08/08/2024)

மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு துறையில் அபிவிருத்தி செயல்பாடுகளினை முன் னெடுப்பதற்காகவும், எதிர் காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில் 08-08-2024 அன்று மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி அளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் விளையாட்டு துறையின் பிரதி நிதித்துவம் வழங்கும் வகையில் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் பல்வேறு விளையாட்டுத் துறையினை மேம்படுத்து முகமாக ஒவ்வொரு விளையாட்டுத் துறைக்குமான பொறுப்பான குழு உறுப்பினர்கள் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>