மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(17-09-2026)
மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 16ம் திகதி அன்று புதன்கிழமை முல்லைத்தீவிற்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்தது ஒப்படைத்த குறித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் 17ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பெற்றுள்ளனர்.
மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 16ம் திகதி புதன்கிழமை (16) காலை 5.30 மணியளவில் முல்லைத்தீவிற்கு குறித்த தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுள்ளது.
இதன் போது குறித்த பேருந்தின் சாரதியாக முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துனராக டெனிஸ் ஆகியோர் கடமையாற்றியுள்ளளனர்.இதன் போது குறித்த பேருந்தில் தர்மபுரம் பகுதியில் வைத்து பெண் ஒருவர் ஏறியுள்ளார்.இந்த நிலையில் குறித்த பெண் குறித்த பணப்பை யை தவற விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பேருந்தில் பணப்பையை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அதை மீட்டு சோதனை செய்த போது குறித்த பணப்பையில் தேசிய அடையாள அட்டை,தங்க செயின் மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவை காணப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த பணப்பையை உடனடியாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தில் அதன் தலைவர் ரி.ரமேஷ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் உடனடியாக குறித்த பணப்பையின் உரிமையாளராக குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
குறித்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரின் முன் மாதிரியான செயலை பாராட்டும் வகையில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் 17ம் திகதி அன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் மற்றும் மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் ஆகியோர் இணைந்து ளெரவித்தமை குறிப்பிடத்தக்கது.