மன்னார் ரோட்டரி கழகத்தின் மனிதநேயச் செயல்

Share

மன்னார் நிருபர்

(3-03-3023)

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராமத்தில் 12 வருடங்களாக ஓலைக் குடிசையிலும் மழைகாலங்களில் ஒழுகும் வீட்டிலும் குழந்தைகளுடன் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் வீட்டுக்கான கூரைச் சீட்டுக்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் வேலைகள் நிறைவு செய்ததை மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் ரொபின் மற்றும் உறுப்பினர் தனேஸ் ஆகியோர் சென்று பார்வையிட்டு குறித்த குடும்பத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதற்கான நிதியினை நோர்வேயில் வசிக்கும் ஜீவகாந்த என்பவர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>