மரண அறிவித்தல் | சண்முகம் பொன்னையா பாலசிங்கம்

Share

தோற்றம்: நவம்பர் 24, 1930
மறைவு: பெப்ரவரி 21, 2024

யாழ்பாணம் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வாழ்விடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீலங்கா நிர்வாக சேவை முன்னாள் யாழ் மாவட்ட உதவி அரசராகப் பணியாற்றி இளைப்பாறிய திரு. சண்முகம் பொன்னையா பாலசிங்கம் அவர்கள் புதன் கிழமை, பெப்ரவரி 21, 2024 அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

இவர் பொதுநிருவாக உள்நாட்டு அமைச்சில் முகாமைத்துவ உத்தியோகத்தவராகவும், முன்னாள் யாழ் மாவட்ட அமைச்சரின் இணைப்புச் செயலாளராகவும், யாழ் விற்பனைத் திணைக்கள உதவி ஆணையாளராகவும், நல்லூர், அச்சுவேலி கிராம சபைகளின் விசேட ஆணையாளராகவும், நாயன்மார்கட்டு இராசஇராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்மன் தேவஸ்தானத் தலைவராகவும், இன்னும் பல சேவைகளை ஆற்றியவராவார். மேலும் இவர் கனடா யுத்தகால ஊனமுற்றோருக்கு உதவும் பணியகத்தில் (War Amps, Canada) கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட கால தொண்டனாக Tuxedo Court கட்டிடப் பிரதிநிதியாக கடமையாற்றியவருமாவார்.

அன்னார், நாயன்மார்கட்டு காலஞ்சென்ற போதிய பணக்காரன் சின்னதம்பி சண்முகத்தின் பேரனும், காலஞ்சென்ற பொன்னையா- சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரனும், கொக்குவில் காலஞ்சென்ற செல்லப்பா சோமசுந்தரம்- பவளம்மா அவர்களின் மருமகனும், சரோஜினிதேவியின் அன்பு கணவரும், வாசுகி (அமெரிக்கா), பாலரவி (அமெரிக்கா), ஜானகி (அமெரிக்கா), தேவகி(அமெரிக்கா), சித்ரா,MD (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஜேந்திரன் பொன்னுத்துரை (அமெரிக்கா), பவானி, MD (அமெரிக்கா), சுகுமார் சண்முகரட்ணம் (அமெரிக்கா), ரவிச்சந்திரன் ரட்ணசிங்கம் (அமெரிக்கா), ரவீந்தர் டிக்கு, MD ( அமெரிக்கா) ஆகியோரின் மாமனாரும், Sophia (அமெரிக்கா), Sonia, MD & Anand (அமெரிக்கா), Julia & Ranga (அமெரிக்கா), Sanje (அமெரிக்கா), Ramyiah (அமெரிக்கா), Dhanesh (அமெரிக்கா), Kiran (அமெரிக்கா), Jay (அமெரிக்கா) அவர்களின் அன்பார்ந்த பேரனும், காலஞ்சென்ற இராசலெட்சுமியின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்களின் மைத்துனரும், அருணாவதி & சண்முகரத்தினம், காலஞ்சென்ற உதயகுமார் & குமாரி, காலஞ்சென்ற சிறீதரன், மங்களேஸ்வரி & குகதாசன்,ஸ்ரீமதி & வனஞ்சரஞ்சன், சிவநேசன்& விக்னேஸ்வரி, அருள்நேசன் & கயல்விழி, அருள்மொழி & யோகராஜா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அன்னாரது பூதவுடல் Ajax Crematorium இல் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 25 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை பெப்ரவரி 26 அன்று காலை 8 மணிக்குக் கிரியைகள் நடை பெற்ற பின் 11 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
பாலசிங்கம் குடும்பம்: (416) 438 – 7755
பாலரவி பாலசிங்கம்: +1 (908) 512-4474
ஜானகி சுகுமார்: +1 (908) 303-1075

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>