யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா -பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், காலஞ்சென்ற கிருபாகரன், மற்றும் கலைச்செல்வி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரெஜீலா, குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிஷாந், கிருஷிகா, அரவிந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தர்மலக்ஷ்மி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம். தனலட்சுமி, மற்றும் அலக்சாண்டர், காலஞ்சென்றவர்களான குணம், எலிசபெத், மற்றும் ஐயாத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்.
ஸ்ரீறிராமின் அன்பு பெரியம்மாவும்,
புவி, குமார், யோகா, சாவித்திரி, சிறானி, அன்ரன், தர்ஷி ஆகியோரின் அன்புச் சிறியதாயும்,
ரவிச்சந்திரன், மோகனச்சந்திரன், சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 18-04-2026 மாலை 5:00 முதல் 9:00 மணிவரையும், பின்னர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 தொடக்கம் 1:30 வரை 8911 Woodbine Ave. Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு பினனர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பிரபா (மகன்): (416) 836-9355
மயூரன் (மகன்): (647) 289-5082
குணசிங்கம் (மருமகன்): (647) 997-0680