மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சூழல் தினம்!

Share

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையி மிகவும் விமரிசையாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பிதம விருந்தினராக பொறியியலாளர் .வீ. ஜே.தெய்வேந்திரா அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.

விழாவில் விருந்தினர்களாக எதிர் காலத்திற்குரிய சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன், மாவட்ட சுற்றாடல் முன்னேடி ஆலோசகர் ப.அருந்தவம், மத்திய சுற்றாடல் அதிகாராசபையின் உடுவில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ரூபினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் சுற்றுச் சூழல் தொடர்பான ஆற்று கைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவியர் எதிர்காலத்தில் ஃபிளாஷ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மாலியன்ற பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுமிருந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>