மறையும் முன்னரே மக்களால் ‘மறக்கப்’பட்டவர்கள்!

Share

‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயர்ப் பலகையோடு பாவப்பட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாய் எக்காலமும் ‘இருந்து’ இறந்து போன இருவரைப் பற்றி சற்று எண்ணத் தொடங்கியபோது தோன்றிய வரிகள் யாழ் மண்ணின் ‘மாவை’ , திருமலை என்னும் தமிழர்களின் கனவுத் தலைநகரில் தோன்றிய சம்பந்தர் என இரண்டு பெருமக்கள் இப்போது எம்மோடு ‘இல்லை’.

இவர்கள் எம் மக்களால் மறக்கப்பட்டவர்கள் தான் இவர்களது காலத்தில் மக்களால் மதிக்கப்பெற்றவர்களாய் பணி செய்திருக்க வேண்டியவர்கள்.. பாவம் செய்தவர்களாய்
பரலோகம் நோக்கிப் புறப்பட்டார்கள்.

மக்கள் இந்த இருவரையும் மிதிக்கவில்லை ஆனால் இறக்கும் வரை இவர்கள் ‘ஏதாவது’
செய்வார்கள் என காத்திருந்தார்கள். இவர்களது பெயர் சொல்ல பல இருக்கின்றன ஆனால் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காய் செய்த பணிகள் பற்றிய தகவல் எதுவுமே இல்லை.

இவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் திரைச்சீலைகளின் மறைவில் வாடிக்கிடக்கின்றன இவர்களால் பல தடவைகள் காப்பாற்றப்பட்ட ‘தமிழினப் படுகொலையாளர்கள்’ மகிந்தாவும் கோட்டாவும் ரணிலும் இவர்களுக்கு  நன்றியுடையவர்களாயும் தமிழர்களின் எதிரிகளாயும் தலைநகரில் வாசம் செய்கின்றார்கள்.

இதய சுத்தியுடன் தன் நலன் இன்றி மக்களுக்காய் பணி செய்திருக்க வேண்டியவர்கள் அவற்றை மறுதலித்து பாவம் செய்ததனால் மறக்கப்பட்டவர்களாய்.. விண்ணுலகில்… மூத்தவர் தலைநகரின் ஜொலிக்கும் மாளிகையின் உள்ளே நினைவிழக்கும் நாள் வரை ‘ உயர்ந்த தமிழர் தலைவர்’ என்று தென்னிலங்கை இனவாதிகள் அழைத்திட ‘புகழுடன்’ .இயற்கையாய் மடிந்தவர்.
இளையவர் இறுதிநாட்களில் வடக்கின் முதல்வராய் சிம்மாசனத்தில் அமரந்திருந்து ஓய்வு பெயவேண்டும் என்ற கனவுகளோடு ‘காலம்’ சென்றவர்.

இவர்கள் எமது மக்களால் அவ்வப்போது இவ்வாறு ‘நினைக்கப்படுவார்கள். ஆமாம்! ஈழத் தமிழர்கள் தங்கள் ‘தலைவிதியை’ எண்ணி அழுது கண்ணீர் வடிக்கின்ற போதெல்லாம்
அவர்கள் மனக்கண்ணின் முன்பாக மறக்கப்பெற்ற இருவரும் தவறாது தோன்றுவார்கள்!

முகநூலில் கிட்டிய நிஜமான வரிகள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>