மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்ற தமிழ் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் மத்தியில், தமிழ் ஆர்வலர்கள் ஆக்கிரமிப்பில் வாசிப்பில் நேசிப்பு, பற்று, ஆர்வம் அதிகப்படுமானால் வளர்தமிழ்ப் படைப்புகள் தடையின்றி வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என்று சிரம்பான், மலேசிய கல்வி க் கழக குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் ஆர்.வி.ஷியாம் பிரசாத் விழா திறப்புரையில் மேற்கண்ட கருத்தை வலியுறுத்திப் பேசினார். பிற மொழிக் கலவைகள் கலக்காத, சேர்க்காத தமிழ் நூலாசிரியர்களின் படைப்புகள் வாசகர்களைக் கவர்ந்திழுப்பதோடு, அவை காலத்தால் அழியாது நூலகங்களில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும் என்று அவர் கூறினார். பிள்ளைப் பருவம் தொட்டு, வாசிப்புப் பழக்கம் தொடருமானால் அவர்களும் ஒரு காலத்தில் மற்றவர்கள் போன்று கவிஞர்களாக, கட்டுரையாளராக, சிறுகதை வடிப்பாளராக, வரலாற்று ப்படைப்பாளராக உருவாக முடியும். எனவே, வாசிப்புப் பழக்கத்தை புறந் தள்ளாமல் மனம் திறந்து ஏற்பதால் அதில் வைக்கும் ஈடுபாடு மூலம் மொழி காலத்தால் அழியாது அபரித வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியும் என்று டாக்டர் பிரசாத் தலைமையேற்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது மேற்கண்ட தகவலை பதிவு செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில், இங்கு செமினி செம்மை பன்முகத் தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் அறிவுச் சோலை மண்டபத்தில் அமைந்த நூலகத்தில் நடை பெற்ற இலக்கிய விழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு மலரை அறிமுகம் செய்து வைத்த வேளையில், இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முன்னதாக , நாட்டுப் பண் நெகாராகூ பாடலுடன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் சங்கமிக்க நிகழ்ச்சி களை கட்டியது. குருஜி மாயோனி ஞான ஒளி பீடம் தமிழ்நாடு, கவிஞர் காசிவிஸ்வலிங்கம் இணைச்செயலாளர் திருவனந்தபுரம் தமிழ் சங்கம், கவிஞர் முல்லைப்பாண்டியன், திருக்குவளை மலாயாபால்கலைக்கழகம் திருவள்ளுவள்ளுவர் ஆய்வுருக்கை
இந்தியவியல் துறைப் பேராசிரியர் ஆ. செல்லபெருமாள், ஆசியால் வாழ்த்துறை வழங்கினர்
இசை ஆசிரியர் கிருஷ்ணபாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் மற்றும் துன்பம் நேர்கையில் யாழெடுத்து ஆகிய மகாகவி பாரதியார் பாரதிதாசன் பாடல்களை இனிமையாகப் பாடி பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றார்.தொடர்ந்து நடைபெற்ற சாதனையாளர்கள் விருது விழாவில், சிலாங்கூர் மாநில அளவில் இருந்து மூன்று பெண்கள் தமிழ்மாமணி விருது வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன், பெஸ்தாரி ஜெயா சமூகச் சேவையாளர் திருமதி ஜெகதீஸ்வரி வேலு, கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன் ஆகிய மூவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு விருது மடல் வழங்கப் பட்டு சிறப்பிக்கப்பட்டனர். அதே வேளையில், தமிழுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் பந்திங் கவிமாமணி எஸ்.எஸ்.மணிமாறன், சிரம்பான் கலைக்காவலர் மைக்கல் பீமன், தமிழ் மலர் கு.தேவேந்திரன், சமூகச் சிந்தனையாளர் தமிழ் நேசன் கே.ஏ.குணா, சிரம்பான் எழுத்தாளர் ந.மாரியப்பன், எம்.கருணாகரன், தொழிலதிபர் டத்தோ கீதாஞ்சலி.ஜி, ஆகியோர் நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். செம்மை சுமா. செல்வராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை நேர்த்தியாக வழி நடத்தினார். ஓய்வு பெற்ற முன்னாள் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குணசேகரன் சடையன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார். கடல் கடந்து பயணித்து வரும் உலக நாடுகளிலும் உலா வரும் இனிய நந்தவனம் திங்களிதழுக்கு, மலேசியாவில் இருந்து எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரும் விடாது தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் படைப்புகளை அனுப்பி இதழ் வளர்ச்சிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்று இனிய நந்தவனம் இதழாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் தமது ஏற்புரையில் குறிப்பிட்டார். இதன் தொடர்பில், இனிய நந்தவனம் சார்பில், ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ச் சேவையாளர் களுக்கு விருதுகள் வழங்கப் பட்டு வருவதாக அவர் கூறினார். இம்முறை, சிலாங்கூர் மாநில அளவில் மூன்று பெண்மணிகள் அவர்கள் ஆற்றி வரும் சேவைக்காக தமிழ்மாமணி விருது வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இனிய நந்தவனம் சந்திரசேகரனின் ஏற்புரையுடன் விழா நிறைவை எட்டியது.
எஸ். எஸ். மணிமாறன்
மலேசியா