மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பீஜிங் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசிய விமானம் மாயம்: பயணிகள் குடும்பத்திற்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு – சீன நீதிமன்றம் அதிரடி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>