மழை நீங்கியும் தூவணம் நிற்கவில்லை! மாங்குளத்தில் கண்ணிவெடி விபத்தில் நான்கு பணியாளர்கள் படுகாயம்!

Share

பு.கஜிந்தன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 5ம் திகதி வியாழக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்

தங்கராசா ராஜேஸ்வரி (வயது 43), கதிரேசு கவிகலா (வயது 40), கிஷோர் மோகனாம்பாள் (வயது 39), சிவரூபன் தமிழினி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>