யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசியில் whatsapp சமூக ஊடகம் மூலம் தொடர்பை எற்படுத்தி இவ்வாறு விற்பனை செய்து வந்த 06 சந்தேகநபர்கள் இன்று, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இருவரை மூன்று நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற கட்டளை பெறப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்களின் விபரங்கள், சந்தேக நபர்களை விசாரணை செய்து பெறப்படவுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>