மாதா பிள்ளை வரம் கொடுக்காததால் சொரூபங்களை உடைத்தேன் – கைதானவர் வாக்குமூலம்

Share

“மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை அந்த விரக்தியிலேயே யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்” என மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் வெள்ளிக்கிழமை (29) அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

அது தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினர் சுதுமலை தெற்கு – சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை முன்னெடுத்த விசாரணையில், “நான் சைவ சமயத்தை சேர்ந்தவன். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்தேன். அவ்வேளையில் பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>