மாத்தறையிலிருந்து மட்டக்கப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு கடத்தி வந்த பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டு கல்குடாவில் கைது

Share

(கனகராசா சரவணன்)

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரை நேற்று வியாழக்கிழமை (7) இரவு மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் வழிகாட்டலின்கீழ் தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பதினமான நேற்று இரவு கல்குடா தபால் கந்தோருக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவழைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபா பெறுடதியான வலம்புரி சங்கு ஒன்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்று பொருளான வலம்புரிசங்கையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>