மாந்தை மேற்கில் “புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்”எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவணி

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(24-06-2025)

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி 24ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாந்தை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி தலைமையில் மன்/அடம்பன் பாடசாலையில் இருந்து பிரதேச செயலகம் ஊடாக நகர் பகுதி வரை இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் முகமாகவும் அதே நேரம் பாடசாலை சூழலில் புகைத்தல் உடன் தொடர்பு பட்ட பொருட்களின் விற்பனையை தடை செய்யும் முகமாகவும் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

‘புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளின் இரு புறங்களிலும் காட்சிப் படுத்தப்பட்டதுடன் பொது மக்களுக்கு புகைத்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது

அதே நேரம் அடம்பன் பாடசாலை சூழலில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் புகைத்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளையும் விற்பனை செய்வதற்கு எதிரான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விழிப்புணர்வு நடைபவனி யில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் ஊழியர்கள்,மாந்தை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள்,மன்.அடம்பன் மகா வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>