மானிப்பாயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு!

Share

15-10-2024 அன்று இரவு 11.00 மணி அளவில் இணுவில் வீதி, மானிப்பாய் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் அங்கிருந்த மகேந்திரா தயாரிப்பான வானின் கண்ணாடிகள் தாக்கப்பட்ட நிலையில் சேதமடைந்தன.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>