யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்கார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான நேற்று பி.ப 3.30 மணிக்கு அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து விசேட ஹோமப் பூசைகள், வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய மானாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் நடனம், மற்றும் கரகம் என்பன நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசங்காரத்தை கண்டுகளித்ததுடன், விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>