மாலியில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் மோதல் தீவிரமடைந்து வருகிறது

Share

மாலியில் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ராணுவத்திற்கும் , கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் உள்நாட்டு போர் தீவிரமடைந்தது. இந்நிலையில், மாலியில் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் பமாகோவில் மாலி ராணுவம் மற்றும் ரஷிய ஆதரவு படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்நாட்டின் வடக்கு நகரங்களான அக்லிஹல், அனிபிஸ், கொவா, ஹனிரொபா உள்ளிட்ட நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>