மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

Share

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆங்கிலேயர்களின் வரி வசூலுக்கு எதிராக போரிட்டு, ஆங்கிலேய படைகளை விரட்டியடித்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று! ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் வரி வசூல் செய்ய முயன்றபோது, தென் மாவட்டங்களில் எழுந்த போர்குரல்களில் முதன்மையானது மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குரல்! இந்திய வரலாற்றில் “முதல் விடுதலைப் போராக” அறியப்படும் சிப்பாய் கலகம் உருவாகும் பல ஆண்டுகளுக்கு முன்பே, தென் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேய படைகளை விரட்டி அடித்தவர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றைய தினத்தில், அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>