மின் துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படுமென அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்

Share

மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்த வேண்டி உள்ளது. மின்துறையில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும். இதுமாதிரி பதவி உயர்வு 45 வருடங்களில் நடந்தது இல்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி இருக்கிறது தமிழக வெற்றி கழக அரசு. மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>