இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார். இசை நிகழ்ச்சியில் பேசிய ஹிப் ஹாப் ஆதி, “‘மீசைய முறுக்கு 1’, ஆதி – ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை. ‘மீசைய முறுக்கு 2’வும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, இரு நண்பர்களை பற்றிய படம்தான். அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன், இன்னொரு பாத்திரம் யார் என்றால், அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர், உண்மையிலேயே எனக்கு தம்பி; நடிக்கிறாயா என விளையாட்டாக கேட்டேன், உடனே சரி எனக் கூறினான், ஹர்ஷத்கான் தான் அது” என்று தெரிவித்தார்.
மீசைய முறுக்கு 2 படம் – ஹிப் ஹாப் ஆதி புதிய பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>