மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது ஏன் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது?

Share

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் கடந்த செவ்வாய் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>