பு.கஜிந்தன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே 07-09-2024 சனிக்கிழமையன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>