மீனவ பிரதிநிதிகளும் பொதுவேட்பாளர் பரப்புரையில்!

Exif_JPEG_420

Share

பு.கஜிந்தன்

வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பாக தீவிர பிரசாரம் 3ம் திகதி செவ்வாயன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகவும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று தமிழ் பொது வேட்பாளர் என்பவர் காலத்தின் சரியான தெரிவு என்றும், சிதறிக்கிடக்கின்ற தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்க்கான ஒரு செயற்பாடு என்றும் தெரிவித்து தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>