முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்

Share

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர். அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>