தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தமிழகம் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்குகிறது. மனமார்ந்த நல்வாழ்த்துகள் முதல்வரே ” என்று பதிவிட்டுள்ளார். விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’ பட புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>