முதல் அமைச்சர் விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது – வைகோ புகழாரம்

Share

முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற விஜய்யை, வாசலுக்கே வந்து துரை வைகோ வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்கு வந்த விஜய்யை பொன்னாடை போர்த்தி வைகோ வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு, கார் வரை வந்து விஜய்யை வைகோ வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: “விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது. ‘உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்’ என்று விஜய் என்னிடம் கூறினார். விஜய்க்கு அறிவுரை அல்ல, வாழ்த்து கூறினேன்.தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம்தான் இந்த தேர்தல் முடிவு. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பேன் என்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். அதை அப்படியே தொடருங்கள் என்று கூறினேன்” என்றார். இவ்வாறு வைகோ கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>