முதல்-அமைச்சர் விஜய் நடிகர் அஜித்துக்கு கார் பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார்

Share

முதல்-அமைச்சர் விஜய் நடிகர் அஜித்துக்கு கார் பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதன்படி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடந்த சனிக்கிழமை சென்றார். அங்கு அஜித் பங்கேற்ற மிக்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.

முன்னதாக கார் பந்தய தொடக்க நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் விஜய் வந்ததும், நடிகர் அஜித் புன்னகையுடன் இரு கரம் கூப்பி அவரை வரவேற்றார். அப்போது அஜித்தை பார்த்ததும் முதல்-அமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி செல்லமாக கைகளை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்து கொண்டு தோளில் அன்பு முத்தமிட்டார். பதிலுக்கு விஜய்யை, அஜித்தும் ஆரத்தழுவி தோளில் அன்பு முத்தமிட்டு வரவேற்றார். விஜய், அஜித் இருவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக பார்த்ததில் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் சத்தம் எழுப்பியபடி ஆரவாரம் செய்து அவர்களை நோக்கி கையசைத்தனர். பதிலுக்கு விஜய், அஜித் இருவரும் உற்சாகமாக புன்னகையுடன் ரசிகர்களை பார்த்து கையசைத்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், நடிகர் அஜித்துக்கு கார் பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார். அதில் ‘அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்’ என்று கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>