முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்

Share

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை  பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நாட்டின் குடியரசு தலைவராக செயல்பட்டார். இதனிடையே, ராம்நாத் கோவிந்த் தனது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்திற்கு ‘இந்திய குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம் நாளை டில்லியில் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். டில்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை அவரது முன்னிலையில் வெளியிடுகிறார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>