முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு அநீதி – அனுர அரசு திட்டமிட்டு புறக்கணிப்பு என சிவில் சமூகம் குற்றச்சாட்டு!

Share

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு
திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 22.01.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காது பழிவாங்கியுள்ளது. இதை ஏற்க முடியாது.

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது.

இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

அந்தவகையில் அரசு குறித்த பழிவாங்கலை கைவிட்டு அவரது பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இதேநேரம் அவ்வாறான சூழலை அரசு உருவாக்காது விட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் கூறுகையில் –

கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் JVP செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

அதே நேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை.

அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றது.

மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகின்றது.

ஆனால் ஆட்சியை கைப்பற்ற அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் உரிய தகுதிகழுக்கேற்ப நியமிக்க வேண்டும்.

இதேவேளை யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்மாற்றம் குறித்து கூறுகையில் –

யாழ் கலாசார மத்திய நிலையமானது ஈ.பி.டி.பி யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் ஒரு குதியீடாக இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படது.

இது அன்று யாழ் மாநகரசபையை ஆட்சி செய்த ஈ.பி.டி.பியினர் பிரேரணையாக கொண்டுவந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அந்த முயற்சி எமது மக்களின் கலாசாரத்தை கொண்டதாக இருந்தமையால் அதனை முழுமையாக ஆதரித்து வரவேற்றிருந்தோம்.

ஆனால் இன்று அதன் பெயர் மாற்றப்படுள்ளது வருத்தமளிக்கின்றது

இதேவேளை இது தமிழ் மக்களின் கலாசாரத்தை சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுக் கூடமாகும்

இந்த பெயர் மாற்றம் இந்திய அரசின் செயற்பாடாகவோ அல்லது அரசின் செயற்பாடாகவோ இருந்தாலும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இதைவிட அந்த நிகழ்வில் தமிழுக்கு கடை நிலை வழங்கப்பட்டமை மற்றும் அந்த சம்பவம் திரை நீக்கம் செய்யும்போது தான் அவ்விடயம் தனக்கு தெரியும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தமை வேதனையான விடையம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>