முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர். உயர்திரு இராசையா சுப்பிரமணியம்

Share

யாழ்/வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்து அமரத்துவமடைந்திட்ட அமரர் உயர்திரு இராசையா சுப்பிரமணியம் அவர்களின் முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எங்கள் வாழ்வில் நாமுயர வழிகாட்டிய அப்பா
ஏணியென நின்றெமை உயரவைத்த அப்பா
செம்மையுறும் வாழ்வினிலே நாமுயர கண்டே
செய்பணிகள் யாவையும் சிறப்புடனே செய்தீர்
எப்போதும் எம்வாழ்க்கை வளம் காண வேண்டி
எழிலான அறிவுரைகள் பற்பலவும் கூறி
செம்மையுற வாழ வைத்த தந்தை எம் தெய்வமன்றோ
மாதம் ஒன்று ஓடி மறைந்தும் மறப்போமா எம் தந்தையை

நன்றி மறப்பது நன்றன்று

எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய் ஒளிவீசி எங்கள் வளமான வாழ்வுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்து மறைந்துவிட்ட எங்கள் பாசத்திற்குரிய தந்தை உயர்திரு. இராசையா சுப்பிரமணியம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லத்திற்கு வருகைதந்தும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டும் மலர்மாலை மலர்வளையங்கள் வைத்தும் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டும் அஞ்சலி செலுத்தியோருக்கும், கனடா மற்றும் உலகின் பலபாகங்களில் இருந்தும் தொலைபேசி தொலை அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தேவார திருமுறை பாடல்களை ஓதியும் இரங்கலுரை நிகழ்த்தியவர்கள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளை சிறப்புற நடாத்திய அந்தண பெருமக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்களுக்கும், நினைவு மலரினை அச்சமைப்பு செய்த ஜே ஜே அச்சகத்தினருக்கும் மற்றும் பலவழிகளிலும் உடன் இருந்து உதவிகள் ஒத்தாசை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இதயம் நிறைந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>