முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும் | திரு. சண்முகம் தியாகராஜா (வர்த்தகர்)

Share

(யாழ்ப்பாணம், வேலணை, கரம்பன், கனடா)

பிறப்பு: 14.06.1943
இறப்பு: 29. 01.2024

தாங்கள் எமக்கு தந்தையாய் கிடைத்தது எம் தவப்பயனே
தந்தையாய் கிடைத்த சொத்தும் நீங்கள் தான் அப்பா!
எங்களை விட்டு நீங்கள் மறைந்தது கொடுமையப்பா
மனம் போன்ற வாழ்வு இனிதாய் தந்தவர் நீங்கள்!
எம்மை தனிமையில் விட்டு சென்றது முறையோ?
மாதம் ஒன்று கடந்தும். எம் அழுகை தீரவில்லை
ஓயாது உங்கள் நினைவு எங்களை வாட்டுகின்றதே!
மண்ணை விட்டு அப்பா நீங்கள் மறைந்து
விண்ணை அடைந்து அங்கு வாசம் செய்தாலும்
உங்கள் ஆசைமுகமும் அன்பான வார்த்தைகளும்
எங்கள் மனதைவிட்டு அகலவே மாட்டா அப்பா!

எங்களின் குடும்பத்தலைவர் இறைபதமடைந்திட்ட செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மண்டபத்திற்கு இருதினங்களும் வருகை தந்து அஞ்சலி செலுத்தி இறுதிக் கிரியைகளிலும் பங்கு கொண்டும் மலர்மாலைகள் சாத்தியும், மலர் வளையங்கள் வைத்தும், தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டும் அனுதாபம் தெரிவித்தவர்கள், பல்வேறு வகையிலும் உதவி நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பதோடு,

எதிர்வரும் சனிக்கிழமை 02-03-2024 அன்று பகல் 11 மணி தொடக்கம் இல. 733 Birchmount Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன வைபவத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்!

இங்ஙனம். மனைவி. பிள்ளைகள். மருமக்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>