முல்லைத்தீவில் வீடொன்றில் சிலர் நுழைந்து துப்பாக்கிச் சூடு – 23 வயதுடைய இளைஞன் பலி.

Share

(மன்னார் நிருபர்)

(10-07-2023)

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் 10-07-2023 சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>