முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

முல்லைத்தீவு மூன்று முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் விளையாட்டு விழா ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற பெயரில் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது

பாடசாலை முதல்வர் சின்னராசா பத்மதாசன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன

நிகழ்வில் மாணவர்கள் பந்து பரிமாற்றம் , தடை தாண்டுதல், கயிறு இழுத்தல் , போத்தல்களுக்குள் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றிருந்தன

நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன

குறித்த நிகழ்வில் துணுக்காய் கல்வி வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் த. புஸ்பரத்தினம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

துணுக்காய் கல்வி வலய ஆரம்ப பாடசாலை அதிபர்கள் , மாந்தை கிழக்கு பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>