மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – உதயநிதி

Share

மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார்

     துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற – தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம். வாடிவாசலில் சீறி வரும் காளைகள் – வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள் – ஆர்வமிக்க பார்வையாளர்கள் என பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமூட்டியது. உலகில் நிகரற்ற நமது பாரம்பரியம் – கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளை வீழ்த்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்.பாலமேட்டில் களம் கண்டுள்ள வீரர்களுக்கும் – காளைகளின் உரிமையாளர்களுக்கும் – ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும். என தெரிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>