வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் அபல்கோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மெக்சிகோ சிட்டியின் டொலுகா விமான நிலையம் அருகே பறந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சான் மெடிகோ அடென்கோ பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி தீப்பற்றி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>