மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசின் தனித் தீர்மானத்திற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்

Share

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது; மேலும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்ட கூடாது என்ற தமிழக மக்கள், விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக த.வெ.க. அரசை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வரவேற்று, பாராட்டுகிறேன். காவேரிப் பிரச்சனை நீர் பிரச்சனை மட்டுமல்ல தமிழக விவசாயிகளின், மக்களின் உயிர் பிரச்சனை என்பதை கர்நாடகா மாநிலத்திற்கு உணர்த்தும் வகையிலே, தமிழக மக்கள் சார்பிலே, விவசாயிகள் சார்பிலே, தமிழக அரசு இன்று சட்டமன்றத்திலே கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டக் கூடாது மற்றும் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்ற அனைத்து கட்சிகளினுடைய ஒத்தக்கருத்தோடு தீர்மானத்தை நிறைவேற்றியதை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ )மனதார வரவேற்கிறது. தமிழக அரசின் இந்த தீர்மானம் தமிழக மக்களின் எண்ணங்களையும், விவசாயிகளின் எண்ணங்களையும் பிரதிபலித்து இருக்கிறது. இத்தீர்மானத்தை தமிழக மக்கள் சார்பிலும், டெல்டா விவசாயிகள் சார்பிலும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பிலும் வரவேற்று, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மற்றும் நதிநீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகளோடும், மக்களோடும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) என்றும் துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>