‘மேக் இன் இந்தியா விளம்பரம்” என்பது இந்திய மக்களுக்கு மோடி அரசு செய்த வரலாற்று பெருந்துரோகமென மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்

Share

‘மேக் இன் இந்தியா விளம்பரம்” என்பது இந்திய மக்களுக்கு மோடி அரசு செய்த வரலாற்று பெருந்துரோகமென மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 12 ஆண்டுகால ‘மேக் இன் இந்தியா விளம்பரம்” என்பது மோடி அரசு இந்திய மக்களுக்குச் செய்த வரலாற்று பெருந்துரோகம் தொடர்ந்து நீடிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டித் தீர்த்த வெற்று விளம்பரங்களால் கட்டமைக்கப்பட்ட போலி மாயையை, ஒன்றிய பாஜக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்டுகின்றன. நாட்டின் உற்பத்தித் துறையை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சுக்குநூறாக்கிய இந்த 12 ஆண்டுகால மோசடி ஆட்சிக்கு இதோ ஆதாரப்பூர்வமான குற்றப்பத்திரிகை. மந்தமான உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. பழைய மற்றும் புதிய வளர்ச்சி தொடர் இரண்டிலுமே, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை விட உற்பத்தித் துறை வளர்ச்சி தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மந்தமாகவே நீடிக்கிறது. 2025-26ல் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட உற்பத்தித் துறை மொத்த மதிப்பு கூட்டலை மைனஸ் 0.3 சதவிகித அளவுக்குப் பாதாளத்திற்குச் சரிந்துள்ளது. தொழில் உற்பத்தி குறியீடு தொழில்துறை உற்பத்தியிலும் புதிய தொடரின்படி உற்பத்தித் துறை வளர்ச்சி மைனஸ் 1.3 சதவிகிதம் பின்தங்கி நிற்கிறது. மேக் இன் இந்தியாவால் எந்தவொரு கூடுதல் எழுச்சியும் ஏற்படவில்லை. வீழ்ச்சியடைந்த உற்பத்திப் பங்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. 2014-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலில் உற்பத்தித் துறையின் பங்கு 17.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 12 ஆண்டுகள் கழித்து 2025-26ல் அது 17.1 சதவிகிதமாக குறைந்து படுதோல்வி அடைந்துள்ளது (பழைய தொடர்). புதிய தொடரிலும் 12 ஆண்டுகளில் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே பெயரளவு உயர்ந்து 15.6 சதவிகிதத்தில் தேங்கி நிற்கிறது. உற்பத்தியின் பங்கை 25 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று கூச்சலிட்ட மோடி அரசின் வெற்று முழக்கம் எங்கே போனது? ஏற்றுமதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கச்சா எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி என்பது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்பிருந்த அதே வழக்கமான வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2012 முதல் சுமார் 1.7 சதவிகிதத்தில் எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே முடங்கிப்போய் நிற்கிறது. சர்வதேச சந்தையில் இந்தியாவை முன்னிறுத்த மோடி அரசு முற்றிலும் தவறிவிட்டது. தொடர்ந்து சரிந்து விழும் தனியார் முதலீடுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் துறையின் மூலதன உருவாக்கம் அல்லது புதிய சொத்து உருவாக்கம் பழைய மற்றும் புதிய தொடர் இரண்டிலுமே தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. மோடி அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பி புதிய ஆலைகளைத் திறக்கவோ முதலீடு செய்யவோ தனியார் நிறுவனங்கள் முற்றிலும் அச்சமடைந்து பின்வாங்குகின்றன. அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சியினால் மோடி அரசு ஏமாற்றும் போக்குடன் நடந்து வருகிறது. அந்நிய நேரடி முதலீட்டிலும் எந்தப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சியை விட உற்பத்தித் துறைக்கான அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. 2014-15ல் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 27.3 சதவிகிதமாக இருந்தபோதே உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீடு வெறும் 4.9 சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்தது. 2022-23ல் உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீடு மைனஸ் 31.2 சதவிகிதம் வரை அதலபாதாளத்திற்கு வீழ்ந்தது. மோடி அரசின் கபட நாடகங்கள், அவர்கள் வெளியிடும் சொந்த அரசுத் தரவுகளாலேயே நாளுக்கு நாள் மக்கள் மன்றத்தில் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டு வருகின்றன. இனியாவது வெற்று விளம்பர மோகத்தை கைவிட்டுவிட்டு, நாட்டின் நலன் கருதி முறையான தொழிற்கொள்கைகளை வகுப்பதிலும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் மோடி அரசு உண்மையான அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>