அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் கடுமையாக தாக்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த தாக்குதலில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், அமெரிக்கா சார்பில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் கப்பல்கள் ஈரானை முற்றுகையிட்டு உள்ளன. ஈரானின் கப்பல்கள் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ விடாமல் அவை தடுத்து வருகின்றன. இதனால், சரக்கு கப்பல்கள் தேக்கமடைந்து சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற தாக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. உலக நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் சந்தித்து மேற்காசிய மோதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பகுதியில் பதற்றம் இன்னும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றி இருதரப்பிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன என தகவல் தெரிவிக்கின்றது.
மேற்காசிய மோதல் தொடர்பாக ஈரான் அமைச்சர் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை மேற்கொண்டனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>