மைதானத்தில் மயங்கி வீழ்ந்த டென்மார்க் வீரர் தற்போது தேறி வருகின்றார்

Share

ஐரோப்பிய 2020 உதைப்பந்தாட்டத் தொடரில் பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் திடீரென சரிந்து வீழ்ந்த டென்மார்க் வீரர் எரிக்சன் மருத்துவமனையில் தற்போது தேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 12ம் திகதி Parken உதைப்பந்தாட்ட மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் பி-யில் உள்ள டென்மார்க்-பின்லாந்து அணிகள் ஆகியன மோதின.

போட்டியின் முதல் பாதி முடிவுதற்கு முன் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சரிந்தது வீழ்ந்ததனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு, எரிக்சன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நடந்த போட்டியில் 1-0 என் கோல் கணக்கில் பின்லாந்து டென்மார்க்கை தோல்வியடைச் செய்தது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எரிக்சன் சுயநினைவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கிறிஸ்டியன் எரிக்சன் மருத்துவமனையில் தான் நலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>