தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது. இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “மை லார்ட்” திரைப்படம் நேற்று வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ‘மை லார்ட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>