மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் வடக்கு மொராக்கோவின் பல்வேறு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. லராச்சே மாகாணத்தில் சார் எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. இதுவரை 1.40 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலியாகி உள்ளனர். எனினும், கடும் வறட்சிக்கு பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சில முதியவர்கள், குழந்தைகள் வீட்டின் மேற்கூரையில் தவித்து வந்தனர். அவர்களை சிறிய படகுகளில் மீட்டு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
மொராக்கோவில் கனமழை – 37 பேர் பலி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>