மோகன்லால் விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (பாலாஜி டெலிபிலிம்ஸ்), கனெக்ட் மீடியா, ஏவிஎஸ் ஸ்டுயோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை சாம் சிஸ் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் முன்னோட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விருஷபா படம் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>