மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து தப்பி ஓட்டம்

Share

பெண் வைத்தியசாலையில் அனுமதி — மட்டு நகரில் சம்பவம்

((கனகராசா சரவணன் )

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் 24ம் திகதி வியாழக்கிழமை(24) காலையில் இடம்பெற்றுள்ளது டன் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் சந்தியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் குறித்த வீதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் 78 வயதுடைய வயோதிப பெண் சம்பவதினமான அன்று காலை 6.30 மணியளவில் வீட்டின் முன் உள்ள வீதி பகுதியை தும்புத் தடியால் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒன்றில் சென்ற இரு இளைஞர்கள் அவரின் கழுத்தில் இருந்த மூன்று இலச்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>