பு.கஜிந்தன்
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!
வீதியை கடந்தவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் (10) கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார். இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த நாகராஜா இராஜபூவதி (வயது 68) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>